மதுரையில் வேல் கம்பால் குத்தி வாலிபர் கொலை - அண்ணன் கைது
வேல் கம்பால் குத்தி வாலிபரை கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டார்.
வேல் கம்பால் குத்தி வாலிபரை கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டார்.
வேல் கம்பால் குத்தி கொலை
மதுரை விராட்டிபத்து முத்துத்தேவர் காலனியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 60). இவருடைய மூத்த மகன் திரவியம் (36), இளைய மகன் பாலமுருகன் (29).
மது பழக்கத்துக்கு அடிமையான திரவியம் சம்பவத்தன்று, போதையில் தகராறு செய்து கொண்டிருந்தார். இதை அறிந்த தம்பி பாலமுருகன் மற்றும் சிலர் அவரை கண்டித்துள்ளனர்.
ஆத்திரமடைந்த திரவியம், தம்பியிடம் தகராறில் ஈடுபட்டார். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது, திரவியல் வேல் கம்பை எடுத்து வந்து தம்பி பாலமுருகனை குத்தியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலன்அளிக்காமல் பாலமுருகன் பரிதாபமாக இறந்தார்.
கைது
இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை கொலை செய்த திரவியத்தை கைது செய்தனர்.