ரெயில் முன் நின்று வாலிபர் தற்கொலை
கும்பகோணத்தில் ரயில் முன் நின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கும்பகோணம்;
கும்பகோணத்தில் ரயில் முன் நின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர்
திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம், திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் முத்துக்குமரன் (வயது 24). இவர் கும்பகோணம் அருகே உள்ள மோட்டார் கம்பெனியில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவர் சில நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் முத்துக்குமரன் நேற்று காலை கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ரயில் நிலையம் அருகில் வந்தார்.
பரிதாப சாவு
அப்போது அந்த வழியாக வந்த திருச்சி- மயிலாடுதுறை ரயில் முன்பு முத்துக்குமரன் சென்று நின்றார். இதில் ரெயிலில் அடிபட்ட முத்துக்குமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முத்துக்குமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.