தூத்துக்குடியில் வாலிபருக்கு கொலைமிரட்டல் விடுத்த 2 பேர் கைது
தூத்துக்குடியில் வாலிபருக்கு கொலைமிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தாமோதரன்நகரை சேர்ந்தவர் டென்னிஸ் ராஜ். இவருடைய மகன் யோகேஸ்வரன் (வயது 24). இவர் கடந்த 24.10.2022 அன்று தூத்துக்குடி முனியசாமிபுரம் அம்பேத்கர் காலனி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது, தூத்துக்குடி முனியசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பிரதீப் (20), தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் வின்சென்ட் பால் மகன் தினேஷ் அந்தோணி பால் (25) ஆகியோர் குடிபோதையில் யோகேஸ்வரனை வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். தொடர்ந்து, அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து யோகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து பிரதீப் மற்றும் தினேஷ் அந்தோணி பால் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.