வாலிபர்கள் ஐக்கிய சங்க புதிய கட்டிடம்
குருகாட்டூரில் வாலிபர்கள் ஐக்கிய சங்க புதிய கட்டிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
தூத்துக்குடி
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை அருகே உள்ள குருகாட்டூர் கிராமத்தில் ஜாலி பிரெண்ட்ஸ் வாலிபர்கள் ஐக்கிய சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.3½ லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநில மாணவரணி அமைப்பாளர் உமரிசங்கர், தென்திருப்பேரை பேரூராட்சி உறுப்பினர் ஆனந்த், தென்திருப்பேரை நகர செயலாளர் முத்துவீர பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story