இளைஞர்கள் எழுச்சி தின விழா
மண்டபம் அருகே விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் இளைஞர்கள் எழுச்சி தின விழா கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம்
பனைக்குளம்,
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் நாகாச்சி ஊராட்சியில் உள்ள விவேகானந்தா வித்யாலயா (சி.பி.எஸ்.இ.) பள்ளியில் விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று காலை இளைஞர்கள் எழுச்சி தினம் கொண்டாடப்பட்டன. முகாமில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.விழாவில் சிறப்பு விருந்தினராக கவுசல்யா, கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை உதவி பேராசிரியர் கோபிநாத் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். இதை தொடர்ந்து மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் சுவாமி சுதபனந்தா மஹராஜ் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் மாரி கிருபா மற்றும் ஆசிரியர் - ஆசிரியைகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story