ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது


ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
x

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் போலீசார் நேற்று சுரண்டை - வீரசிகாமணி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பொய்கைமேடு பகுதியில் ஒரு காரில் ரேஷன் அரிசி கடத்தி வந்த சங்கரன்கோவில் நெடுங்குளத்தை சேர்ந்த கணேசமூர்த்தி (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 மூட்டைகளில் கடத்தப்பட்ட 680 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story