மதுவிற்ற வாலிபர் கைது


மதுவிற்ற வாலிபர் கைது
x

மதுவிற்ற வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி-அறந்தாங்கி சாலை அருகில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஆலங்குடி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தெற்கு பாத்தம்பட்டியை சேர்ந்த சிவசாமி மகன் ஆனந்தன் (வயது 23) என்பவர் மறைத்து வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் ஆனந்தனை கைது செய்து, அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story