மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக செல்லும் இளைஞர்கள்


மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக செல்லும் இளைஞர்கள்
x

நாகையில் மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் அதிவேகமாக செல்கின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகையில் மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் அதிவேகமாக செல்கின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிக வேகமாக செல்கின்றனர்

நாகையின் முக்கிய சாலைகளாக பப்ளிக் ஆபீஸ் ரோடு, வ.உ.சி சாலை, நாகூர் மெயின் ரோடு ஆகியவை உள்ளன. போக்குவரத்து நிறைந்த இந்த சாலைகளில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக செல்கின்றனர்.

குறிப்பாக மாலை நேரங்களில் அதிக, திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக செல்வதால், பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர். இதன்காரணமாக எதிரே வாகனங்களில் வரும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

அடிக்கடி ஏற்படும் விபத்துகள்

ஒரே நேரத்தில் 3-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்டு, பயங்கர சத்தத்துடன் வேகமாக செல்கின்றனர். இதனால், சாலைகளில் நடந்து செல்வோர் கூட அச்சத்தில் கீழே விழுந்து காயம் அடைக்கின்றனர். இதுபோன்று அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

எனவே போலீசார் இந்த சாலைகளில், வாகன சோதனை மேற்கொண்டு, மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக செல்லும் இளைஞர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story