பேரூராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் ஆய்வு


பேரூராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலையில் பேரூராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சியில் கோவை மண்டல பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி ஆய்வு நடத்தினார். அப்போது 5 மற்றும் 6-வது வார்டு பகுதியில் ரூ.2 கோடி செலவில் மாணிக்கலாடி முதல் பன்னிமூலா வரையிலான 1,300 மீட்டர் தார் சாலை அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பணிகளை விரைவாக முடிக்கும்படி உத்தரவிட்டார். தேவர்சோலை பஜாரில் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை பார்வையிட்டார்.

ஆய்வின் போது பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் சுப்பிரமணியம், செயல் அலுவலர் முகமது இப்ராஹிம், பேரூராட்சி தலைவர் வள்ளி, துணைத்தலைவர் யூனஸ் பாபு, பணி ஆய்வாளர் சேகர் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ரூ.2 கோடியில் நபார்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்படுவதால் கவுண்டன்கொல்லி பழங்குடியின குடியிருப்புவாசிகள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்கள் பயன் பெறுவார்கள். மேலும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story