மண்டல அளவிலான ஆக்கி போட்டி தொடக்கம்
மண்டல அளவிலான ஆக்கி போட்டி தொடங்கியது
திருச்சி
மண்டல அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் ஆக்கி போட்டி திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. திருச்சி ஆக்கி அகாடமி சார்பில் நடக்கும் இந்தபோட்டியில் 11 அணிகள் பங்கேற்றுள்ளன. 2 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் திருச்சி ஆக்கி அகாடமி அணி, டபோடில்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் திருச்சி ஆக்கி அகாடமி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் காஜாமியான் பள்ளி அணியுடன், திருச்சி ஆக்கி அகாடமி அணி மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடிய காஜாமியான் பள்ளி அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது மற்றும் கடைசி நாள் போட்டிகள் நடக்கின்றன.
Related Tags :
Next Story