"ஸ்டாலின் தான் வருகிறார்" விளம்பர பதாகை வைப்பதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதிப்பு


ஸ்டாலின் தான் வருகிறார் விளம்பர பதாகை வைப்பதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதிப்பு
x
தினத்தந்தி 1 March 2021 6:24 PM IST (Updated: 2 March 2021 6:58 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டாலின் தான் வருகிறார் என்ற விளம்பர பதாகை வைப்பதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

சென்னை,

‘ஸ்டாலின் தான் வருகிறார்’ விளம்பர பதாகை வைப்பது தொடர்பாக திமுக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் மூலம் விளக்கம் கேட்டிருந்தது. இந்த நிலையில், திமுக ஸ்டாலின் தான் வருகிறார் விளம்பர பதாகை வைப்பது தொடர்பான திமுக கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

அதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம் ‘‘ விளம்பரம் தொடர்பான உண்மை தன்மை அனைத்திற்கும் அந்த விளம்பரத்தை வெளியிடுபவர்தான் பொறுப்பாக வேண்டும். கடைகளில் விளம்பர பதாகை வைக்க மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். விளம்பர பதாகை வைப்பது குறித்து, அந்த பகுதி மாவட்ட அதிகாரி முடிவு செய்வார்கள். விளம்பர பதாகை வைப்பது தொடர்பான செலவுகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும்’’ எனத் தெரிவித்துள்ளது.

Next Story