வருகிற 6,7 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
வருகிற 6,7 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் பல்வேறு கட்சியினர் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வருகிற 6,7 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் & கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் தோழர்களிடமிருந்து பிப்ரவரி 25 முதல் மார்ச் 5-ம் தேதி வரை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அனைவரிடமும் மார்ச் 6 மற்றும் 7 -ம் தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேர்காணல் நடைபெறவுள்ளது. விருப்பமனுவினை சமர்ப்பித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் நடைபெறும் நேர்காணலில் அவசியம் பங்கேற்கவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் & கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் தோழர்களிடமிருந்து பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
— KS_Alagiri (@KS_Alagiri) March 2, 2021
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அனைவரிடமும் மார்ச் 6 மற்றும் 7 -ம் தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேர்காணல் நடைபெறவுள்ளது.
— KS_Alagiri (@KS_Alagiri) March 2, 2021
விருப்பமனுவினை சமர்ப்பித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் நடைபெறும் நேர்காணலில் அவசியம் பங்கேற்கவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
— KS_Alagiri (@KS_Alagiri) March 2, 2021
Related Tags :
Next Story