அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நாளை நடக்கிறது ஒரே கட்டமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்


அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நாளை நடக்கிறது ஒரே கட்டமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்
x
தினத்தந்தி 3 March 2021 9:45 AM IST (Updated: 3 March 2021 9:45 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஒரே கட்டமாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சியான அ.தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனு வினியோகிக்கப்பட்டு வருகிறது. விருப்ப மனு வினியோகம் இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது.

இதனைத்தொடர்ந்து உடனடியாக வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட இருக்கிறது. தேர்தல் நெருங்குவதால் கட்சி ரீதியான அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளிடமும் ஒரேகட்டமாக வேட்பாளர் நேர்காணல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை (வியாழக்கிமை) அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நடைபெற இருக்கிறது.

நாளை நடக்கிறது

இதுகுறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒப்புதலுடன் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரளா மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் போட்டியிட விரும்பி, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு செலுத்தியோருக்கான நேர்காணல், 4-ந்தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட வாரியாக நடைபெறுகிறது.

அதன் விவரம் வருமாறு:-

மதுரை, கோவை, கிருஷ்ணகிரி

காலை 9 மணி முதல் கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, நெல்லை, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, தேனி, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு,

புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், நீலகிரி, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு, சேலம் மாநகர், சேலம் புறநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டங்களுக்கு வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.

சென்னை, திருச்சி, கடலூர்

பிற்பகல் 3 மணி முதல் கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு, வேலூர் மாநகர், வேலூர் புறநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் கிழக்கு, கடலூர் மத்தியம், கடலூர் மேற்கு, காஞ்சீபுரம், செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வட சென்னை தெற்கு (கிழக்கு), வட சென்னை தெற்கு (மேற்கு), தென் சென்னை வடக்கு (கிழக்கு), தென் சென்னை வடக்கு (மேற்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு), தென் சென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, கேரள மாநிலங்களுக்குமான வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.

இந்த நேர்காணலில் தொகுதி பற்றிய நிலவரம், வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரம் அறிந்திட, தங்களுக்காக விண்ணப்பித்துள்ளவர்கள் மட்டும் விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story