பா.ம.க. தேர்தல் அறிக்கை டாக்டர் ராமதாஸ் நாளை வெளியிடுகிறார்
பா.ம.க. தேர்தல் அறிக்கை டாக்டர் ராமதாஸ் நாளை வெளியிடுகிறார்.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. உடனான கூட்டணியை உறுதி செய்த, பா.ம.க.வுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை பா.ம.க. மேற்கொண்டு வருகிறது. சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் அங்கம் வகித்தாலும், பா.ம.க. தனக்கென்று பல்வேறு அறிவிப்புகளுடன் பிரத்யேகமான தேர்தல் அறிக்கையை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ம.க. நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிட உள்ளது.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கான பா.ம.க. தேர்தல் அறிக்கை சென்னையில் வருகிற 5-ந்தேதி (நாளை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் இந்த பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்குவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story