"என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணியில் விரிசல் இல்லை" - புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் உறுதி
என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணியில் விரிசல் இல்லை என்று புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் வகையில் பா.ஜ.க. காய் நகர்த்தி வருகிறது. அந்தவகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தனர். காங்கிரஸ் ஆட்சியும் கவிழ்ந்தது. இந்தநிலையில் அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பா.ஜ.க. ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் இதில் கணிசமான இடங்கள், மேல்சபை எம்.பி., நியமன எம்.எல்.ஏ.க்கள் கேட்டு என்.ஆர்.காங்கிரஸ் பிடிவாதம் செய்து வருகிறது. இதனால் தொகுதி உடன்பாட்டில் இழுபறி காணப்படுகிறது.
இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் தற்போது பா.ஜ.க. கூட்டணியில் தான் உள்ளது என்றும் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மர் குமார் சுரானா கூறினார்.
இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணியில் விரிசல் இல்லை என்று புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இரு தினங்களில் முடிவு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story