2வது கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது: இந்திய கம்யூ.கட்சியின் முத்தரசன்


2வது கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது:  இந்திய கம்யூ.கட்சியின் முத்தரசன்
x
தினத்தந்தி 4 March 2021 12:29 PM GMT (Updated: 4 March 2021 12:29 PM GMT)

2வது கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்து என்று இந்திய கம்யூ.கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில்,  முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து இழுபறி நீடித்த நிலையில்  திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதிப் பங்கீடு குறித்து இன்று  2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பின் முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே நாளை தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.

ஏற்கெனவே நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூ.கட்சிக்கு 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இந்திய கம்யூ.கட்சி இரட்டை இலக்கு எண்ணில் தொகுதிகள் கோரியிருந்தது.

Next Story