திமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய உத்தரவு
கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை 8- ந்தேதிக்குள் இறுதி செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை
தற்போது திமுக கூட்டணியில் இதுவரை நான்கு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை விரைந்து இறுதி செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
8-ம் தேதிக்குள் அனைத்து கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருக்கு அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story