திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள்...? அவசர உயா்நிலைக்குழுக் கூட்டத்தில் இன்று ஆலோசனை


திமுக கூட்டணியில்  மதிமுகவுக்கு 4 தொகுதிகள்...? அவசர உயா்நிலைக்குழுக் கூட்டத்தில்  இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 6 March 2021 11:27 AM IST (Updated: 6 March 2021 11:27 AM IST)
t-max-icont-min-icon

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள்...? திமுக கொடுக்க முன்வந்துள்ள தொகுதிகளை ஏற்கலமா? வேண்டமா? என மதிமுக உயா்நிலைக்குழுக் கூட்டத்தில் இன்று முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது.

சென்னை

தற்போது திமுக கூட்டணியில் இதுவரை நான்கு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது மனித நேய மக்கள் கட்சிக்கு  2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை விரைந்து இறுதி செய்ய  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளா

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ம.தி.மு.க.வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வின் நிலைப்பாட்டை ஏற்கமுடியவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. வுக்கு ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் ஒதுக்க முடியும் என்று தி.மு.க. திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால், முதல் சுற்று பேச்சுவார்த்தை ம.தி.மு.க.வுக்கு மனக்கசப்பாக அமைந்தது. தி.மு.க. தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை வைகோவிடம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், தி.மு.க. தரப்பில் இருந்து மீண்டும் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர் அதிலும் முடிவு எட்டப்படவில்லை 

இந்த பேச்சுவார்த்தையில், தங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும் என்ற மனநிலையில் ம.தி.மு.க. குழுவினர்  தி.மு.க. குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 20 நிமிடங்களில் முடிவடைந்தது.

தி.மு.க. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், 2-ம் சுற்று பேச்சுவார்த்தையும் ம.தி.மு.க.வினருக்கு அதிருப்தியாக அமைந்தது. இதனை ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா நிருபர்களிடம் பேட்டி அளிக்கும் போது உணர முடிந்தது. 

மதிமுக 10 தொகுதிகள் வரை எதிா்பாா்க்கிறது. ஆனால், திமுக தரப்பில் 4 தொகுதிகள் வரையே ஒதுக்க முன்வந்துள்ளதுடன், திமுக  சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. திமுகவின் அணுகுமுறையால் மதிமுக கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. 

2001-இல் திமுக 21 தொகுதிகள் ஒதுக்கியபோதே அதைப் புறக்கணித்துதனித்துப் போட்டியிட்டது மதிமுக.  10 தொகுதிகளுக்குக் குறைவில்லாமல் தர வேண்டும் எனவும், தனிச் சின்னத்திலேயே போட்டியிடுவோம் எனவும் வைகோ உறுதியாக உள்ளார்.

மேலும், திமுகவுடன் கூட்டணி குறித்து முடிவு செய்ய மதிமுக உயா்நிலைக்குழுக் கூட்டத்தையும் மாா்ச் 6-இல் வைகோ கூட்டியுள்ளாா்.தி முக கூட்டணியில் 10 தொகுதிகள் வரை கோருகிறது. திமுக ஒதுக்க முன்வந்துள்ள 4 தொகுதிகளை ஏற்க மதிமுக தயாராக இல்லை என தகவல்  கூறுகின்றன. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மதிமுக இன்று நடைபெறும் உயா்நிலைக்குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.

மதிமுகவின் அவசர உயர்நிலைக் குழு கூட்டம் இன்று மாலை கூடுகிறது. திமுக கொடுக்க முன்வந்துள்ள 4 தொகுதிகளை ஏற்கலமா? வேண்டமா? என முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது.

Next Story