20 தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது- திருமாவளவன்
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது: - 20 தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது.
திமுகவுக்கு 20 தொகுதிகளை அதிமுக விட்டுக்கொடுத்துள்ளது. மார்ச் 10-ம் தேதி விசிக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் எந்தெந்த தொகுதியில் போட்டி என்பது ஓரிரு நாட்களில் இறுதிசெய்யப்படும்.” என்றார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story