அதிமுக மற்றும் பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை - குஷ்பு பிரசாரம்


அதிமுக மற்றும் பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை - குஷ்பு பிரசாரம்
x
தினத்தந்தி 6 March 2021 7:54 PM IST (Updated: 6 March 2021 8:07 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக மற்றும் பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என சென்னை சேப்பாக்கத்தில் நடிகை குஷ்பு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும் பா.ஜ.க.வே போட்டியிடுகிறது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடிகை குஷ்பு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

அதிமுக மற்றும் பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. பிரதமர் மோடி தினமும் 20 மணி நேரம் மக்களுக்காக உழைக்கிறார். எங்களின் வெற்றிக்கு சேப்பாக்கம் தொகுதி பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பாஜக சார்பில் "வெற்றி கொடி ஏந்தி தமிழகம்" என்ற பிரசார பேரணியை குஷ்பு தொடங்கி வைத்தார். 

Next Story