பாஜக - அதிமுக - பாமக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் : அமித்ஷா பேட்டி


பாஜக - அதிமுக - பாமக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் : அமித்ஷா பேட்டி
x
தினத்தந்தி 7 March 2021 7:19 AM GMT (Updated: 7 March 2021 7:19 AM GMT)

தமிழகத்தில் பாஜக - அதிமுக - பாமக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை உள்ளது என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வந்தார். காலை 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்கிய அமித்ஷா, பின்னர் 10.10 மணிக்கு அங்கிருந்து சுசீந்திரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 

இதையடுத்து, 10.35 மணிக்கு சுசீந்திரம் நகர மக்களிடம் ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’ என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.  

கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள பொன் ராதாகிருஷ்ண‌னுக்கு ஆதரவாக வீடுவீடாக சென்றும் அமித்ஷா வாக்கு சேகரித்து வருகிறார். 

இந்த பிரசார நிகழ்ச்சிக்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, வரும் தேர்தல் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ வேண்டும். பாஜக - அதிமுக - பாமக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை உள்ளது’ என்றார்.

Next Story