புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை


புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 7 March 2021 8:23 AM GMT (Updated: 7 March 2021 8:23 AM GMT)

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

புதுச்சேரி,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இறுதி செய்யும் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம், கந்தசாமி, சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். புதுச்சேரி திமுக அமைப்பாளர்கள் சிவா, சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதியான நிலையில் இந்த பேச்சுவார்ததை நடைபெற்றது. 

பேச்சுவார்த்தைக்கு பின்னர் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி கூறுகையில், திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்போம். புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக இருக்கிறது. மேலும் கட்சி தலைமையின் ஆலோசனைப்படி, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.

Next Story