தேசிய செய்திகள்

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம்: மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி + "||" + CM Mamata Banerjee begins roadshow in Siliguri against rising fuel, gas prices

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம்: மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம்: மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.
கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இறுதி மற்றும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 291 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. எஞ்சிய 3 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளார். தேர்தலில் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதையடுத்து, தனது பிரசார நடவடிக்கைகளை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். 



 


இந்நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சிலிஹூரி நகரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. அதில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதுடன், பதாகைகளுடன் ஏராளமான பெண்கள் கண்டனப் பேரணியில் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய மம்தா பானர்ஜி, “ சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் மாற்றம் நிகழப்போவது, மேற்கு வங்காளத்தில் அல்ல. மத்தியில் தான். மேற்கு வங்காளத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். முதலில் உ.பி., பீகார் மற்றும் பிற மாநிலங்களில் என்ன நிலை என்று பிரதமர் மோடி பார்க்க வேண்டும். மேற்கு வங்காளத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல் மந்திரிக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் வெளியிடப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு விமர்சனம்
முதல் மந்திரி - கவர்னருக்கு இடையேயான தகவல் தொடர்பின் புனிதத்தை சீர்குலைப்பதாக உள்ளது என மேற்கு வங்க உள்துறை தெரிவித்துள்ளது.
2. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்: மத்திய மந்திரி பியூஸ்கோயல்
கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும், என திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் மத்திய மந்திரி பியூஸ்கோயல் கூறினார்.
3. கொல்லப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதியின் மனைவி: ஆப்கானிஸ்தான் சிறையில் வாடும் கேரள பெண்ணுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு தாய் கோரிக்கை
ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதியின் மனைவியான தனது மகளுக்கு மன்னிப்பு கொடுத்து, அவரை சிறையில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தாய் கோரிக்கை விடுத்து உள்ளார்.
4. கோவேக்சினுக்கு அமெரிக்கா அங்கீகாரம் தர மறுப்பு; இந்திய தடுப்பூசி திட்டத்துக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை: மத்திய அரசு அறிவிப்பு
கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதலை அமெரிக்கா தர மறுத்ததால், இந்திய தடுப்பூசி திட்டத்துக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
5. தடுப்பூசி தயக்கம் போக்க மத்திய அரசு நடவடிக்கை; மாநிலங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதாக தகவல்
கிராமப்புறங்களில் உள்ள சுகாதார பணியாளர்களிடையே தடுப்பூசி பற்றி தயக்கம் இருப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது.