சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நாளை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்


சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நாளை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 8 March 2021 5:18 AM GMT (Updated: 8 March 2021 5:18 AM GMT)

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நாளை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, பிரதான கட்சியான அ.தி.மு.க. தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பா.ம.க.வுக்கு 23 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 20 இடங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டன. தே.மு.தி.க., த.மா.கா. உள்பட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதிமுக கூட்டணியில் இழுபறியில் இருந்த தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்றிரவு அல்லது மார்ச் 10 அன்று ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.  சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது.  அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில் தேமுதிக நாளை ஆலோசனை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story