அதிமுக வேட்பாளர் பட்டியல் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 March 2021 12:17 PM GMT (Updated: 8 March 2021 12:17 PM GMT)

அதிமுக வேட்பாளர் பட்டியல் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, 

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி உடன் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது, இதில் பாமகவுக்கு 23 ,பாஜகவுக்கு 20 என ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிகவுடன் மட்டுமே இழுபறி நீடித்து வருகிறது. 

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் அதிமுக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது மற்றும் தேர்தல் அறிக்கை குறித்தும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Next Story