புதுச்சேரியில் தொகுதி பங்கீடு தொடர்பாக என்.ஆர்.காங். மற்றும் பாஜக ஆலோசனை


புதுச்சேரியில் தொகுதி பங்கீடு தொடர்பாக என்.ஆர்.காங். மற்றும் பாஜக ஆலோசனை
x
தினத்தந்தி 8 March 2021 6:19 PM IST (Updated: 8 March 2021 6:19 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு தொடர்பாக என்.ஆர்.காங். மற்றும் பாஜக ஆலோசனை நடத்தியது.

புதுச்சேரி, 

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸைத் தனது கூட்டணியில் சேர்க்க பாஜக கடும் முயற்சி எடுத்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவும் ரங்கசாமியிடம் பேசினார். அதைத் தொடர்ந்து, ரங்கசாமி தனது நிர்வாகிகளுடன் என்.ஆர்.காங்கிரஸ் தலைமை அலுவலத்தில் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், ரங்கசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் பாஜக தலைவர் சாமிநாதன் ஆகியோர் அங்குள்ள தனியார் விடுதியில் ரங்கசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு குறித்து பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கூறுகையில், “ பாஜக கூட்டணியில் ரங்கசாமி தொடர்ந்து நீடித்து வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக வரும் தேர்தலில் அமோக வெற்றி பெறும். ரங்கசாமி தலைமையை ஏற்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தயாராக இருக்கிறது. ஓரிரு நாளில் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார். 

அவரைத்தொடர்ந்து, தே.ஜ. கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் இணைய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்தார். 

Next Story