தேர்தல் செலவினங்கள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுளது.
மேலும், பணப்பட்டுவாடாவை தடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும்படை களமிறக்கப்பட்டு வாகன சோதனை உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல்
செய்யப்பட்டு வருகிறது.
மேலும், கட்சிகள் எவ்வளவு பணம் செலவிடுகின்றன என்பதை கண்காணிப்பதற்காக இந்த தேர்தலுக்கு முதல் முதலாக சிறப்பு செலவீன பார்வையாளர்கள் தேர்தலுக்கு முன்பிருந்தே களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இதற்காக மது மகாஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய 2 ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமணம் செய்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் செலவினங்கள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் சிறப்பு செலவீன பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை,
வருமான வரித்துறை, சுங்கத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இதில் ஓட்டுக்காக இலவச பொருட்கள், பணப்பட்டுவாடா ஆகியவற்றை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் வகுத்துள்ள ரகசிய திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story