"வரும் தேர்தலில் அ.தி.மு.க-பாஜக கூட்டணி வெற்றி பெறும்" - பொன். ராதாகிருஷ்ணன்
வரும் தேர்தலில் அ.தி.மு.க-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்திப்பில் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
“மக்கள் மத்தியில் முதல்வர், துணை முதல்வருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.வரும் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும். தேமுதி க கட்டாயம் எங்கள் கூட்டணிக்கு வரும்.
திமுகவின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள். அதேபோல் தான் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த 7 வாக்குறுதியும் ஏமாற்று வாக்குறுதிகள் ”
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story