தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் தோல்வி - விஜயகாந்த் மகன் ஆவேசம்
தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி தோல்வி அடைவார் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தொண்டர்களிடையே ஆவேசமாக பேசினார்.
சென்னை
அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில், இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்களிடம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகுவதாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று அறிவித்தார்.
இந்த நிலையில் பண்ருட்டியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியதாவது:-
அதிமுகவிற்கு இனி இறங்கு முகம் தான். அதிமுகவின் தலைமைதான் சரி இல்லை. நாங்கள் கேட்கிற சீட் கொடுக்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் சீட் பறிக்கப்படும். தலையே போனாலும் தன்மானத்தை இழக்க மாட்டோம். யாருக்கும் தேமுதிகவினர் சளைத்தவர்கள் அல்ல.குகையில் இருக்கும் சிங்கம் வெளியே வருகின்றது, இனி வேட்டை தான். சாணக்கியனாக இருந்த தேமுதிக, சத்திரியனாக மாறும் நேரம் வந்துவிட்டது.
தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி தோல்வி அடைவார். அவரது சொந்த தொகுதியிலேயே பழனிசாமி மண்ணை கவ்வுவார். சாதியை பற்றி எனக்கு தெரியாது. சாதியைப்பற்றி பேசுவதில் நான் முட்டாளாகவே இருப்பேன். எனக்கு தெரிந்த ஒரே சாதி தேமுதிகதான், ஒரே மதம் கேப்டன்தான்.
தமிழகத்தில் இரண்டு ஆளுமைகள் இருந்த போதே தனித்து களம் கண்டிருக்கிறோம்.தமிழகத்தில் ஊழல் செய்யாத ஒரே கட்சி தேமுதிகதான்.சட்டப்பேரவைத் தேர்தலில் 99 சதவீதம் தனித்து தான் தேமுதிக போட்டியிடும். திமுக ஆட்சிக்கு வந்தால் சந்தோஷமே என கூறினார்.
Related Tags :
Next Story