திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவு ; 174 தொகுதிகளில் திமுக போட்டி
திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது
சென்னை
சட்டசபை தேர்தலில் 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது திமுக வேட்பாளர்கள் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் என 187 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. திமுக கூட்டணியில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
உதயசூரியன் சின்னத்தில் மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு உதயசூரியன் சின்னத்தில் 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்ப்ட்டு உள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story