திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு


திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 10 March 2021 1:27 PM IST (Updated: 10 March 2021 1:31 PM IST)
t-max-icont-min-icon

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்றும் சில நாட்களே உள்ள நிலையில் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

அந்த வகையில், திமுக தலைமையிலான கூட்டணியில் கூட்டணியில், காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவை, அகில இந்திய பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில், காங்கிரஸ் கட்சிக்கு 25, வி.சி.க, ம.தி.முக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் கொங்கு மக்கள் தேசிய கட்சி, முஸ்லீம் லீக் கட்சிக்கு தலா 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், தமிழர் வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவைக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி போட்டியிட உள்ளது. இதற்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கையெழுத்தானது.

Next Story