மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் எஸ்டிபிஐ கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை


மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் எஸ்டிபிஐ கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 10 March 2021 2:59 PM IST (Updated: 10 March 2021 3:03 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் எஸ்டிபிஐ (இந்திய சமூக ஜனநாயகக் கட்சி) கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இதற்கிடையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் எஸ்டிபிஐ (இந்திய சமூக ஜனநாயக கட்சி) கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எஸ்டிபிஐ கட்சிக்கு 15 முதல் 18 தொகுதிகள் வரை ஒதுக்க மக்கள் நீதி மய்யம் முன்வந்துள்ளதாகவும், ஆனால், எஸ்டிபிஐ தங்களுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என எதிர்ப்பார்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பாக 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story