வாய்ப்பு மறுக்கப்பட்ட 41 எம்எல்ஏக்கள் யார் யார்? அதிமுக வேட்பாளர் பட்டியல் முக்கிய அம்சங்கள்
சட்டசபை தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட 171 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
சென்னை
அ.தி.மு.க. சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட 171 வேட்பாளர்கள் வெளியிடப்பட்டது.
அதிமுக வேட்பாளர் பட்டியல்லின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* கடந்த முறை வெற்றி பெற்று அமைச்சர்களாக பதவி வகித்து வரும் பாஸ்கரன், நிலோபர் கபில் மற்றும் வளர்மதி ஆகிய 3 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, கதர் காதி கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகிய மூவருக்கு வாய்ப்பி வழங்கப்படவில்லை.
* சிவகாசி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் தொகுதிக்கு மாறி உள்ளார்.
* திருத்தணி எம்எல்ஏவாக உள்ள நரசிம்மன், ஊத்தங்கரை எம்எல்ஏவாக உள்ள மனோரஞ்சிதம் , பர்கூர் எம்எல்ஏவாக உள்ள ராஜேந்திரன்,
கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருக்கும் பிரபு ,கெங்கவல்லி எம்எல்ஏவாக உள்ள மருதமுத்து, ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ சின்னதம்பிக்
ஓமலூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல், சங்ககிரி தொகுதி எம்எல்ஏ எஸ்.ராஜா, சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் ஆகியோருக்கு வாய்ப்பு வ்ழங்கப்படவில்லை மேட்டூர் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டதால் செம்மலை தேர்தலில் போட்டி இல்லை.
* அதிமுக மாநிலங்களவை எம்பிக்களாக உள்ள 2 பேருக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
* கோவையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதில் தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
* அதிமுக கூட்டணியில் இன்னும் 14 தொகுதிகளுக்கான விவரங்கள் வெளியாகவில்லை
* முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், செ.தாமோதரன், நத்தம் விசுவநாதன், கு.ப.கிருஷ்ணன் ,பரஞ்ஜோதி, வைகைச்செல்வன், இசக்கி சுப்பையா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அதிமுக வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட 41 சிட்டிங் எம்எல்ஏக்கள் யார் யார்?
திருத்தணி - நரசிம்மன், கே.வி.குப்பம் - லோகநாதன், வாணியம்பாடி - நிலோபர் கபில்
ஊத்தங்கரை - மனோரஞ்சிதம், பர்கூர் - வீ.ராஜேந்திரன், கள்ளகுறிச்சி - பிரபு
கங்கவள்ளி - மருதமுத்து, ஆத்தூர் - சின்னதம்பி,
ஓமலூர் - வெற்றிவேல் மேட்டூர் - செம்மலை, சங்ககிரி - எஸ்.ராஜா, சேலம் (தெற்கு)- சக்திவேல்
வீரபாண்டி - மனோன்மணி, சேந்தமங்களம் -சந்திரசேகர், பெருந்துறை -தோப்பு வெங்கடாசலம்
அந்தியூர் - ராஜா கிருஷ்ணன், பவானி சாகர் - ஈஸ்வரன், குன்னூர் - ராமு
மேட்டுபாளையம் - ஓ.கே. சின்னராசு, பல்லடம் - நடராஜன், கவுண்டபாளையம் - ஆறுகுட்டி
கிணத்துகடவு -சண்முகம், வால்பாறை - கஸ்தூரி வாசு, கிருஷ்ணராயபுரம் - கீதா
ஸ்ரீரங்கம் - வளர்மதி, மணச்சநல்லூர் - பரமேஸ்வரி, பெரம்பலூர் - தமிழ்ச்செல்வன்
பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம், விருத்தாசலம் - கலைச்செல்வன், மயிலாடுதுறை - ராதாகிருஷ்ணன்
பட்டுக்கோட்டை - வி.சேகர், பேராவூரணி - கோவிந்தராஜூ, கந்தர்வகோட்டை - ஆறுமுகம் அறந்தாங்கி - ரத்தினசபாபதி, சிவகங்கை -பாஸ்கரன், கம்பம் -ஜக்கையன்
ஸ்ரீவில்லிபுத்தூர் - சந்திரபிரபா,
இராமநாதபும் - மணிகண்டன், அம்பாசமுத்திரம் - முருகையா பாண்டியன்
நாங்குநேரி - ரெட்டியார் நாராயணன்,
சோளிங்கர் - சம்பத், சாத்தூர் -ராஜவர்மன்
Related Tags :
Next Story