நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல்

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 11 March 2021 2:49 AM IST (Updated: 11 March 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல், வருகிற 27-ந் தேதி தொடங்கி 8 கட்டங்களாக நடக்கிறது. இதில், முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, முக்கியத்துவம் வாய்ந்த நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கொல்கத்தா, 

அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்காக வேட்புமனு தாக்கல் நடைபெறும் ஹால்டியா துணை கோட்ட அலுவலகத்துக்கு 2 கி.மீ. தூரம் வாகன பேரணியாக சென்றார்.

இந்த தொகுதியில், மம்தாவை எதிர்த்து, அவரது கட்சியில் மூத்த தலைவராக இருந்தவரும், சமீபத்தில் பா.ஜனதாவுக்கு தாவியவருமான சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். இது, சுவேந்து அதிகாரியின் சொந்த தொகுதி ஆகும். எனவே, போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story