அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் 23 தொகுதிகள் எவை? பட்டியல் வெளியீடு


அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் 23 தொகுதிகள் எவை? பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 11 March 2021 4:45 AM IST (Updated: 11 March 2021 4:45 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் 23 தொகுதிகள் எவை? எவை? என்பது குறித்த பட்டிலையை அ.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் கூட்டாக வெளியிட்டு இருக்கின்றன.

சென்னை, 

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிட இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்ததிலும் 2 கட்சிகள் கையெழுத்திட்டு இருந்தன.

இந்த நிலையில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகள் எவை? எவை? என்பது குறித்த பட்டியல் வெளியானது. அதில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டு வெளியிட்டு இருந்தனர்.

23 தொகுதிகள்

அதன்படி, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளின் விவரங்கள் வருமாறு:-

1) செஞ்சி, 2) மைலம், 3) ஜெயங்கொண்டம், 4) திருப்போரூர், 5) வந்தவாசி, 6) நெய்வேலி, 7) திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), 8) ஆற்காடு, 9) கும்மிடிப்பூண்டி, 10) மயிலாடுதுறை, 11) பென்னாகரம், 12) தர்மபுரி, 13) விருதாச்சலம், 14) காஞ்சீபுரம், 15) கீழ்பென்னாத்தூர், 16) மேட்டூர், 17) சேலம் (மேற்கு), 18) சோளிங்கர், 19) சங்கராபுரம், 20) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, 21) பூந்தமல்லி (தனி), 22) கீழ்வேலூர் (தனி), 23) ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்).

பா.ம.க. கடந்த சட்டமன்ற தேர்தலில் (2016) 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. இதற்கு முன்பு 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 27 தொகுதிகளில் போட்டியிட்டு அதில் 20 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது.

Next Story