திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுகிறது


திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுகிறது
x
தினத்தந்தி 11 March 2021 6:45 AM GMT (Updated: 11 March 2021 6:45 AM GMT)

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுகிறது.

சென்னை,

சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. நீண்ட இழுபறிக்கு பின்னர் தொகுதிகள் உடன்பாடு நிறைவுபெற்றது. 

இதில் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 173 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 25 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 6 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா 3 இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களிலும், அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் போட்டியிட உள்ளன.

இந்நிலையில் திமுக - தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதியை திமுக ஒதுக்கியது. இதையடுத்து திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுகிறது.

Next Story