அ.ம.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
அ.ம.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு.
சென்னை,
சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் அ.ம.மு.க.வுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து கூட்டணி தொடர்பாக பேசி வந்தது.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி, தமிழக பொறுப்பாளர் அப்துல் மஜீத் சாகிப், மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து பேசினர். இதில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஆலந்தூர், ஆம்பூர், திருச்சி மேற்கு, திருவாரூர், மதுரை (மத்தியம்) மற்றும் பாளையங்கோட்டை ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து மக்கள் நீதி மய்யத்துடன் உடன்பாடு எட்டப்படாததற்கு காரணம் என்ன? என்று நிருபர்கள் கேட்டதற்கு, தெகலான் பாகவி பதில் அளித்து கூறுகையில், ‘‘அ.ம.மு.க. உடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே, மக்கள் நீதி மய்யம் எங்களை தொடர்புகொண்டு பேசி வந்தார்கள். அதனால்தான் அவர்களோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்ததற்கு காரணம். அ.ம.மு.க. உடனான பேச்சுவார்த்தை தொடங்கிய உடனே, மக்கள் நீதி மய்யம் உடனான பேச்சுவார்த்தையை முடிக்க முடியவில்லை. அ.ம.மு.க. உடனான கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டதால், மக்கள் நீதி மய்யம் உடனான பேச்சுவார்த்தையை முடித்துவிட்டோம்’’ என்றார்.
Related Tags :
Next Story