தொகுதி கண்ணோட்டம்: தட்டாஞ்சாவடி(பாண்டிச்சேரி)


தொகுதி கண்ணோட்டம்: தட்டாஞ்சாவடி(பாண்டிச்சேரி)
x
தினத்தந்தி 12 March 2021 12:48 AM GMT (Updated: 12 March 2021 12:48 AM GMT)

புதிய தட்டாஞ்சாவடியில் தட்டாஞ்சாவடி வார்டு மட்டுமே உள்ளது. அதை தவிர்த்து பழைய ரெட்டியார்பாளையம் தொகுதியிலிருந்து பாக்குமுடையான்பட்டு, கவுண்டன்பாளையம் வார்டுகளும், ராஜாஜிநகர், வினோபா நகர் வார்டுகளின் ஒருபகுதியும் இணைந்துள்ளன. இந்த தொகுதியில் காங்கிரஸ் 5 முறையும், ஜனதா தளம் 4 முறையும், என்.ஆர்.காங்கிரஸ் 2 முறையும், 2019 இடைத்தேர்தலில் தி.மு.க.வும் வெற்றிபெற்றுள்ளது.

தட்டாஞ்சாவடி தொகுதியானது கடந்த 1974-ம் ஆண்டு உருவானது. இந்த தொகுதி முதல்-அமைச்சரை உருவாக்கிய தொகுதி என்ற நட்சத்திர அந்தஸ்தை பெற்றதாகும். இந்த தொகுதியில் வெற்றிபெற்றுதான் 2001-ம் ஆண்டு ரங்கசாமி முதல்-அமைச்சராக ஆனார். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பில் பழைய தட்டாஞ்சாவடி தொகுதி 3 புதிய தொகுதிகளாக உருவெடுத்துள்ளது.

புதிய தட்டாஞ்சாவடியில் தட்டாஞ்சாவடி வார்டு மட்டுமே உள்ளது. அதை தவிர்த்து பழைய ரெட்டியார்பாளையம் தொகுதியிலிருந்து பாக்குமுடையான்பட்டு, கவுண்டன்பாளையம் வார்டுகளும், ராஜாஜிநகர், வினோபா நகர் வார்டுகளின் ஒருபகுதியும் இணைந்துள்ளன. இந்த தொகுதியில் காங்கிரஸ் 5 முறையும், ஜனதா தளம் 4 முறையும், என்.ஆர்.காங்கிரஸ் 2 முறையும், 2019 இடைத்தேர்தலில் தி.மு.க.வும் வெற்றிபெற்றுள்ளது. தொகுதியில் 30 ஆயிரத்து 483 வாக்காளர்கள் உள்ளனர். வழக்கம்போல் இந்த தொகுதியிலும் பெண்களே அதிகம் உள்ளனர்.

இந்த தொகுதியில் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் பலர் உள்ளனர். தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையும் இங்குதான் உள்ளது.

தொகுதியில் போக்குவரத்து நெருக்கடி, இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகள் உள்ளன. முழுக்க முழுக்க நகரப்பகுதியை உள்ளடக்கிய இந்த தொகுதியில் தினக்கூலி தொழிலாளர்களும் அதிக அளவில் உள்ளனர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:

என்.ஆர்.காங். வெற்றி

மொத்தவாக்குகள்- 30,532

பதிவான வாக்குகள்- 23,704

1. அசோக் ஆனந்து (என்.ஆர்.காங்.)-12,754

2.சேதுசெல்வம் (இந்திய கம்யூ.)-5,296

3.காசிநாதன் (அ.தி.மு.க.)- 1,649

4.கலியபெருமாள் (தி.மு.க.)- 1,467

5.சிவானந்தம் (பா.ஜனதா)- 897

6.கண்ணதாசன் (என்.டி.கே.)-361

7.முருகசாமி (பா.ம.க.)-227

8.ஜெயபாலன் (சுயே)-56

9.பசுபதி (ஐ.ஜே.கே.)-33

நோட்டா- 922

2019 இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

1.வெங்கடேசன் (தி.மு.க.)-வெற்றி- 10,906

2. நெடுஞ்செழியன் (என்.ஆர்.காங்)-9,367

இதுவரை நடந்த தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள் விவரம் வருமாறு:-

1974- பெத்தபெருமாள்- காங்.

1977- பெத்தபெருமாள்- ஜனதா தளம்

1980- பெத்தபெருமாள்-ஜனதா தளம்

1985-பெத்தபெருமாள்-ஜனதா தளம்

1990-பெத்தபெருமாள்-ஜனதா தளம்

1991-ரங்கசாமி- காங்

1996-ரங்கசாமி- காங்

2001-ரங்கசாமி- காங்

2006-ரங்கசாமி- காங்

2011-அசோக் ஆனந்து- என்.ஆர்.காங்.

2016-அசோக் ஆனந்து- என்.ஆர்.காங்.

2019- வெங்கடேசன் (இடைத்தேர்தல்)- தி.மு.க.

பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் - 30483

ஆண்கள் - 14341

பெண்கள் - 16139

மூன்றாம் பாலினத்தவர் - 3


Next Story