தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளை தவிர்த்து, கூட்டணியில் மற்ற கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் மட்டும் காலதாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று நள்ளிரவில் தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையே தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது.
இதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு திருப்பரங்குன்றம், திண்டுக்கல், கந்தர்வக்கோட்டை, கோவில்பட்டி, அரூர் மற்றும் கீழ்வேளூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவடைந்ததால் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வேட்பாளர்கள் பட்டியலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைத்து, மரியாதை செலுத்திய பின்னர், மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story