மக்கள் நீதி மய்யம் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்; முழுவிவரம்


மக்கள் நீதி மய்யம் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்; முழுவிவரம்
x
தினத்தந்தி 12 March 2021 9:38 AM GMT (Updated: 12 March 2021 9:38 AM GMT)

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடுபவர்களின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. மக்கள் நீதி மய்யத்துக்கு 154 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இதில் 70 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கிடையே கூட்டணியில் இடம்பெற்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகளும், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு முதல் கட்டமாக செங்கல்பட்டு, காட்பாடி, வேப்பனஹள்ளி மற்றும் திருவாரூர் ஆகிய 4 தொகுதிகளும் ஒதுக்குவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். இதில் 40 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயர் இடம்பெற்றுள்ளது. அதுதவிர கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் மநீக சார்பில் சுபா சார்லஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஸ்ரீஹரன் பாலா வில்லிவாக்கம் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சந்தோஷ்பாபு வேளச்சேரி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல், 

கோவை தெற்கு - கமல்ஹாசன்

சிங்காநல்லூர் - மகேந்திரன்

பொன்னேரி - தேசிங்கு ராஜன்

திருவள்ளூர் - தனிகவேல்

ஆவடி - உதையகுமார்

அம்பத்தூர் - வைத்தீஷ்வரன்

திருவெற்றியூர் - மோகன்

தியாகராயநகர் - பழ.கருப்பையா

மயிலாப்பூர் - ஸ்ரீ பிரியா

சோழிங்கநல்லூர் - ராஜீவ்

ஆலந்தூர் - சரத்பாபு

ராணிப்பேட்டை - ஆடம்பாட்‌ஷா

வேலூர் - விக்ரம் சக்ரவர்த்தி

ஊத்தங்கரை - முருகேஷ்

கிருஷ்ணகிரி - ரவிசங்கர் 

தர்மபுரி - ஜெயவெங்கடேஷ்

பாப்பிரெட்டி பட்டி - சீனிவாசன்

செஞ்சி - ஸ்ரீபதி

வானூர் - அன்பின் பொய்யாமொழி

எடப்பாடி - தாசப்பராஜ்

சேலம் மேற்கு - தியாகராஜன்

சேலம் வடக்கு - குரு சக்ரவர்த்தி

சேலம் தெற்கு - மணிகண்டன்

பரமத்திவேலூர் - நடராஜ்

பவானி - சதானந்தம்

கோபிசெட்டிபாளையம் - பிரகாஷ்

கவுண்டம்பாளையம் - சுரபி பங்கஜ் ராஜ்

கோயம்புத்தூர் வடக்கு - தங்கவேலு

தொண்டாமுத்தூர் - ஸ்ரீநிதி

பொள்ளாச்சி - சதிஷ்குமார்

உடுமலைபேட்டை - மூகாம்பிகா

மணச்சநல்லூர் - சம்சன்

தஞ்சை - சுந்தரமோகன்

மதுரை கிழக்கு - முத்துகிருஷ்ணன்

மதுரை வடக்கு - அழகர்

மத்திய மதுரை - மணி

திருப்பரங்குன்றம் - பரணி ராஜன்

திருவாடனை - சத்தியராஜ்

ஸ்ரீவைகுண்டம் - சேகர்

பாளையங்கோட்டை - பிரேம்நாத்

கோவை வடக்கு - தங்கவேலு

Next Story