தமிழக சட்டசபை தேர்தல்- முதல் நாளில் 57 பேர் வேட்பு மனு தாக்கல்


தமிழக சட்டசபை தேர்தல்- முதல் நாளில் 57 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 12 March 2021 10:09 PM IST (Updated: 12 March 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை தேர்தலில் முதல் நாளில் 57 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அதிமுக சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல் நாளிலேயே வேட்பு மனு தாக்கல் செய்தார். திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட, பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். திண்டுக்கல் தொகுதியில் அமிஅச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேட்புமனு தக்கல்ச் எய்தார். மேலும் சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முதல் நாள் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 56 ஆண்கள், ஒரு பெண் என மொத்தம் 57 பேர்  மனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக போடிநாயக்கனூர் தொகுதியில் ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் மனு  தாக்கல் செய்துள்ளனர்.

 
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கட்கிழமை (மார்ச் 15) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதேபோல் மற்ற தொகுதிகளில்  போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களும் திங்கட்கிழமை வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். 

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் 15-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்து, அன்றைய தினமே பிரசாரத்தை தொடங்க உள்ளார். 

Next Story