மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தத்தில் புதியதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் (படிவம்-6) தனிப்பட்ட தொலைபேசி எண் (Unique Mobile No) பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்குரிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை (e-EPIC) NVSP (https://www.nvsp.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு சுருக்கமுறை திருத்தம்- 2021-ன் போது, புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்போன் எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்துகொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
இந்த உத்தரவின்படி இன்றும் (சனிக்கிழமை) மற்றும் நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் (தோராயமாக 30 ஆயிரத்து 400 இடங்கள்) சிறப்பு முகாம் நடத்த அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதன்படி சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2021-ன் போது வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் இந்த முகாமினைப் பயன்படுத்தி தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை தங்களது செல்போன்/ கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Related Tags :
Next Story