காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே எதிர்ப்பு தெரிவித்து சத்தியமூர்த்தி பவனில் போராட்டம்


காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே எதிர்ப்பு தெரிவித்து சத்தியமூர்த்தி பவனில் போராட்டம்
x
தினத்தந்தி 13 March 2021 12:04 PM GMT (Updated: 13 March 2021 12:04 PM GMT)

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே எதிர்ப்பு தெரிவித்து சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டிகள் போராட்டம் நடைபெறுகிறது.

சென்னை

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் காங்கிரஸ் தரப்பில் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே எதிர்ப்பு தெரிவித்து சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடைபெறுகிறது.

கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி ஒரு தரப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
வேட்பாளர் பட்டியல் தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் மூன்று கோஷ்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

விளவங்கோடு தொகுதியில் விஜயதரணியை வேட்பாளராக களமிறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஒரு காங்கிரஸ் கோஷ்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தேவையின்றி களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் போட்டி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

இதுகுறித்து விஷ்ணு பிரசாத் கூறும்போது, ''காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்களது உறவினர்களுக்குத் தொகுதியைக் கேட்டுப் பெறுகிறார்கள். தமாகாவிலிருந்து விலகி மீண்டும் காங்கிரசில் இணைந்தவர்களுக்கு தொகுதி வழங்கப்படுகிறது. இந்த காங்கிரஸ் பேரியக்கம் ராகுல் காந்தியின் ரத்த வியர்வையால் வளர்ந்த கட்சி. கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு சீட் வழங்குவதில் என்ன நியாயம்? உண்மையாக உழைப்பவர்களுக்குத் தொகுதிகளை வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

ஜோதிமணி எம்.பி கூறும் போது தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெற முடியும் என்பது அக்கிரமம் என கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் வாரிசுகளுக்கும், பண பலத்துக்குமே முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்று மாநில மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவி ஜான்சிராணி குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story