கோவை தெற்கு தொகுதியில் போட்டி: 15-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார் கமல்ஹாசன்


கோவை தெற்கு தொகுதியில் போட்டி: 15-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார் கமல்ஹாசன்
x
தினத்தந்தி 13 March 2021 11:47 PM IST (Updated: 13 March 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வரும் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், இதுவரை 111 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

அதில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் கமல்ஹாசன் வரும் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story