தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு கே.எஸ்.அழகிரி வரவேற்பு 'ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக அமையும்'


தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு கே.எஸ்.அழகிரி வரவேற்பு ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக அமையும்
x
தினத்தந்தி 15 March 2021 2:55 AM IST (Updated: 15 March 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு கே.எஸ்.அழகிரி வரவேற்பு 'ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக அமையும்'.

சென்னை, 

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையாக பார்ப்பதைவிட கூட்டணியின் தேர்தல் அறிக்கையாகவும், மக்களின் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தேர்தல் கதாநாயகனாக விளங்கி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல இன்றைக்கு தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை மனதில்கொண்டு, தொலைநோக்கு பார்வையோடு வெளியிடப்பட்டிருக்கிறது. மக்களின் நம்பிக்கையை பெறுகிற வகையில் வெளியிடப்பட்டுள்ள தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறேன்.

எனவே, தி.மு.க. வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவோடு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் தி.மு.க. தலைமையில் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைந்திட அடித்தளமாக இருக்கும் என்பதை உறுதியோடு கூற விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story