ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான அரசியல் பேரவை சட்டசபை தேர்தலில் போட்டி


ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான அரசியல் பேரவை சட்டசபை தேர்தலில் போட்டி
x

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான அரசியல் பேரவை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.

இதற்கிடையில், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட்  குவாரி முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர் சகாயம் ஐஏஎஸ். இதன் பின் தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக பயணியாற்றிய சகாயம் ஐ.ஏ.எஸ். விருப்ப ஒய்வு பெற்றார்.

இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான அரசியல் பேரவை வரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ்நாடு இளைஞர் கட்சியுடன் சகாயம் அரசியல் பேரவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

இத்தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடப்படும் என சகாயம் அறிவித்தார். இதற்காக முதல்கட்டமாக 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை சகாயம் வெளியிட்டார். சகாயம் அரசியல் பேரவையுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடும் போதும் வரும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என சகாயம் அறிவித்துள்ளார்ர். 

Next Story