திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு: வேட்புமனுவில் வெளியான தகவல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 12-ம் தேதி முதல் தொடங்கியது.
முதல் நாளில், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் உட்பட, 59 பேர் மனு தாக்கல் செய்தனர். இரு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் வேட்புமனு தாக்கல் துவங்கியது. இதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான மு.க ஸ்டாலின் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி மு.க ஸ்டாலினின் சொத்து மதிப்பு 4.94 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு 1.17 கோடியாகவும் உள்ளது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் 53 லட்சம் மதிப்பில் அசையும் அசையா சொத்துகள் உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டைக் காட்டிலும் மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு 20 லட்சம் அதிகரித்துள்ளது. அதேபோல, உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பை விட ஸ்டாலினின் சொத்து மதிப்பு குறைவாக உள்ளது. மேலும், மு.க.ஸ்டாலின் மீது 45 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story