வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு ஆர்.சரத்குமார் கோரிக்கை
வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு ஆர்.சரத்குமார் கோரிக்கை.
சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு, கடந்த 12-ந் தேதி முதல் வருகிற 19-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மொத்தம் 6 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் 2 நாட்கள் கடந்து இன்னும் 4 தினங்களே உள்ளது.
இந்த நிலையில், வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் புதிய வங்கிக் கணக்கு தொடங்க முடியாமல் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநிலதேர்தல் ஆணையமும், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் தற்போதைய சூழலை கருதி வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story