தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று தேர்தல் பிரசாரம்


தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 16 March 2021 10:51 PM GMT (Updated: 2021-03-17T04:21:35+05:30)

4 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

மதுரை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று (புதன்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அவர், மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர் சின்னம்மாள், மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் கோ.தளபதி, தெற்கு தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் புதூர் பூமிநாதன் மற்றும் மதுரை மத்திய தொகுதி தி.மு.க. வேட்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகிய 4 பேரை ஆதரித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் பகல் 11 மணி அளவில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

முன்னதாக அவர் நத்தம் மற்றும் வேடசந்தூர் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு மதுரைக்கு வருகிறார். மதுரையில் பழங்காநத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் 4 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் வகையில் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. திறந்த வேனில் நின்றபடி 4 வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரசாரம் செய்கிறார். 

அதனைத்தொடர்ந்து விமானம் மூலம் மதியம் 1.30 மணிக்கு சென்னை புறப்படுகிறார். சென்னையில் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் மாலையில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

Next Story