சட்டமன்ற தேர்தல்: தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் தெற்கு மண்டலம் - கனிமொழி எம்.பி; வடக்கு மண்டலம் - எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.


சட்டமன்ற தேர்தல்: தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் தெற்கு மண்டலம் - கனிமொழி எம்.பி; வடக்கு மண்டலம் - எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.
x
தினத்தந்தி 17 March 2021 4:39 AM IST (Updated: 17 March 2021 4:39 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தெற்கு மண்டலத்துக்கு கனிமொழி எம்.பி.யும், வடக்கு மண்டலத்துக்கு எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.யும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை கவனித்திடும் வகையில் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமித்து உள்ளார்.

அதன்படி தி.மு.க. மண்டல பொறுப்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-

கனிமொழி, ஜெகத்ரட்சகன்

மத்திய மண்டலம் - தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி.

தெற்கு மண்டலம் - மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.

வடக்கு மண்டலம் - உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.

மேற்கு மண்டலம் - உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் தயாநிதி மாறன் எம்.பி.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் - துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா.

தொகுதி பொறுப்பாளர்கள்

தொகுதி பொறுப்பாளர்கள் விவரம் வருமாறு:-

கொளத்தூர் - கி.நடராஜன், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் - ஏ.சரவணன், ராயபுரம், பெரம்பூர் - வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், ஆர்.கே.நகர் - சுபா.சந்திரசேகரன், மதுரவாயல், அம்பத்தூர் - ஜி.செல்வராஜ், அண்ணாநகர் - சி.எச்.சேகர், திருவள்ளூர் - துறைமுகம் காஜா, மதுராந்தகம் - ஆர்.டி.அரசு.

Next Story